முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி

புதன்கிழமை, 25 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹம்பன்டோடா, ஜூலை. 25 -   இந்திய அணிக்கு எதிராக ஹம்பன் டோடாவில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங் கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகி யுள்ளது. முன்னதாக நடந்த முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெளுத்துக் கட்டினார்கள். ஆனால் இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் மோசமாக ஆடி யதால் இந்திய அணி தோல்வி அடைந் தது. 

குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், உபுல் தரங்கா மற்றும் தில்ஷான் இருவ ரும் அரை சதம் அடித்து அணிக்கு வெ ற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, பெ ரீரா மற்றும் மேத்யூஸ் இருவரும் சிறப் பாக பந்து வீசி தலா 3 விக்கெட் எடுத்த னர். மலிங்கா மற்றும் ஹெராத் இருவ ரும் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசி னர். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளு க்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோடாவில் உள்ள மகிந்தா ராஜபக்சே சர்வதேச கிரிக்கெ ட் அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்று பேட்டிங் செய்ய களமிறங்கிய இந் திய அணி வீரர்கள் மோசாமாக ஆடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொ

டுத்தனர். 

முதலில் களம் இறங்கிய காம்பீர் மற்று ம் சேவாக் இருவரும் சற்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 31- ல் சேவாக் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 

அதன் பின்பு களம் இறங்கிய வீரர்கள் சீட்டு கட்டு போல சரிந்தனர். காம்பீர் ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தார். அடுத்தபடியாக பின்வரிசை வீரரான அஸ்வின் 21 ரன் எடுத்தார். 

காம்பீர் 96 பந்தில் 65 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். அஸ்வின் 15 பந்தில் 21 ரன்னையும், சேவாக் 15 ரன்னையும், தோனி 11 ரன்னையும் எடு த்தனர். 

இலங்கை அணி சரார்பில், பெரீரா 19 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். மேத்யூஸ் 14 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட்டையும், ஹெராத் 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

இலங்கை அணி 139 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலா என்ற எளிதான இலக் கை இந்திய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத் தது. 

இதனால் இலங்கை அணி இந்தப் போ   ட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இலங்கை அணி தரப்பில், 60 பந்தில் 59 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். தில்ஷான் 49 பந்தில் 52 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்