முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா துறையினர் அஜ்மீர் தர்ஹாவுக்கு வர எதிர்ப்பு

புதன்கிழமை, 25 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

அஜமீர்,ஜூலை. 25 - தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக அஜ்மீர் தர்காவுக்கு நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வருவதற்கு தர்காவின் நிர்வாகி ஜெய்னுல் ஆபிதீன் அலி கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இஸ்லாத்தில் நடனம் மற்றும் படங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தற்போது சினிமாவில் ஆபாச காட்சிகளே அதிகளவில் உள்ளது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது. இந்த படங்களைப் பார்த்து தான் சமுதாயம் கெட்டுப் போகிறது. தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக திரை நட்சத்திரங்கள் தர்காவுக்கு வருகின்றனர். அப்படியே தங்கள் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். ஒரு தர்காவில் இது போன்று படத்திற்கு விளம்பரம் தேடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

படத்தை ஹிட்டாக்க ஆபாச காட்சியைக் காட்டுவார்கள். ஆனால் அந்த படத்தை விளம்பரப்படுத்த, ஹிட்டாகட்டும் என்று வேண்ட அஜ்மீர் தர்காவுக்கு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தி?ல் இஸ்லாமிய அறிஞர்கள் அமைதி காப்பது ஆச்சரியமாக உள்ளது. இஸ்லாமிய அறிஞர்களும், உலமாக்களும் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பாலிவுட் தயாரிப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா பர்தா அணிந்தும், கத்ரீனா கைப் ஸ்கர்ட் அணிந்தும் வந்தனர். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் பட ரிலீஸுக்கு முன்பு சங்கராச்சாரியார் மடத்திற்கோ அல்லது குருத்வாராவுக்கோ போக வேண்டியது தானே? என்றார்.

ஆனால் தர்காவின் காதிம் குதுப்தீன் சாகி கூறுகையில்,

யாரும் தர்காவுக்கு விளம்பரத்திற்காக வருவதில்லை. பாலிவுட் நட்சத்திரங்கள் கடந்த 23 ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவற்கு தடை போடுவதாக அறிவித்த அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது. கான் விளம்பரத்திற்காக இப்படி கூறியிருக்கிறார் என்றார்.

டெல்லியில் உள்ள பிரபல தர்காவின் ஹசரத் நிஜாமுத்தீன் கூறுகையில், அஜ்மீர் தர்கா தலைவர் இஸ்லாத்தின் பெயரில் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார். வியாபார நோக்கத்துடன் பாலிவுட் நட்சத்திரங்கள் தர்காவுக்கு வருவதாகக் கூறுவது முற்றிலும் தவறு என்றார்.

அனைவருக்கும் கடவுளின் அருள் தேவை. தர்காவுக்கு செல்ல பிரபலங்களுக்கு தடை விதித்திருப்பது நியாயமன்று. தர்கா அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த தடையை நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பேன் என்று பாலிவுட் நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்