முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு பான் கி மூன் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

ஐ.நா., ஏப்ரல் 3 - ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார் இ ஷெரீப் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் மீது சமீபத்தில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஐ.நா.ஊழியர்கள் குறைந்தது 8 பேர் பலியானார்கள். 

இந்த சம்பவம் ஐ.நா. ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஒரு சிறிய கிறிஸ்துவ தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும்  டெர்ரி ஜோன்ஸ் என்பவர் முஸ்லீம்களின் புனித நூலான குர் ஆனை எரித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஆப்கானிஸ்தானில் மசார் இ ஷெரீப் என்ற இடத்தில்  முஸ்லீம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நுற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் அந்த ஊரில் இருந்த ஐ.நா.அலுவலகம் அருகே கோஷம் போட்டனர். அப்போது திடீர் என்று வன்முறை வெடித்தது.  அந்த ஐ.நா.அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த தாக்குதலில் 8 ஐ.நா. ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 4 ஆப்கானிஸ்தானியர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் மூர்க்கத்தனமானது என்றும் கோழைத்தனமானது என்றும் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago