முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் மாற்றமில்லை

வியாழக்கிழமை, 26 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, ஜூலை.26 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சாமி கும்பிட வந்தனர். மதியம் 12.00 மணிக்கு கோவில் வளாகத்திற்கு வந்தனர். கோவில் ஆகம விதி முறைப்படி 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். இவர்கள் வந்த நேரம் நடை சாத்தப்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர். அப்போது அருணகிரிநாதர் நிருபர்களிடம் கூறியதாவது, 

நித்தியானந்தா கைலாய யாத்திரை செல்கிறார். அதனால் அவரை வழியனுப்பி வைக்க வருமாறு அவரும் சீடர்களும் என்னை அழைத்தனர். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் அவரை வழியனுப்ப வந்தேன். என்னை யாரும் வசியம் செய்ய முடியாது. 

மதுரை ஆதீனத்தின் முடிவுகள் அனைத்தையும் நானேதான் எடுப்பேன். நித்தியானந்தாதான் இளைய ஆதீனம். அதில் எந்த மாற்றமும் இல்லை. மதுரை ஆதீனம் மீது கூறிய புகார்கள் அனைத்தும் பொய்யானது. இவ்வாறு அவர் கூறினார். நித்தியானந்தா கூறும் போது, 

கைலாயத்திற்கு சென்று வந்த பிறகு ஆண்மை பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அமெரிக்க கோர்ட்டு தீர்ப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமெரிக்காவில் உள்ல அமைப்பு என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்