முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்விக்கு காரணம் என்ன? தோனி விளக்கம்

வியாழக்கிழமை, 26 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹம்பன்டோடா, ஜூலை. 26 -  இலங்கைக்கு எதிரான 2 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தோல் விக்கு காரணம் என்ன ? என்பதற்கு கேப்டன் தோனி விளக்கம் அளித்து இருக்கிறார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான 2 - வது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோடாவில் உள்ள ராஜபக்சே மைதானத்தில் நடந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தி ய அணி 138 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்பு ஆடிய இலங்கை அணி 20 ஓவரி ல் 1 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. 

ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை, வெளிநாட்டுத் தொடரில் இந்த ஸ்கோர் இந்திய அணியின் குறைந்த ஸ்கோரில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு எதிரான இந்த 2-வது போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனியிடம் கேட்ட போது, ஆடுகளத்தின் மோச மான தன்மையே தோல்விக்கு முக்கிய காரணம் என்றார் அவர். இந்தப் போட்டியில் இந்திய வீரர்களின் மோசமான ஷாட் தேர்வு தான் தோல் விக்கு காரணம் என்று கூறப்படும் குற்றச் சாட்டையும் அவர் மறுத்தார். 

இந்திய அணி இந்தப் போட்டியில் 33.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 138 ரன்னை எடுத்தது. கடந்த 5 வருடங்களில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் மிகக் குறைந்த ஸ்கோரில் இது 4 -வது ஸ்கோராகும். 

மேலும் முதல் போட்டி நடந்த மைதா   னத்தின் அருகாமையிலேயே இந்த மை தானம் இருந்த போதிலும், இந்த ஆடுகளம் வித்தியாசமாக செயல்பட்டது என் றும் தோனி கூறினார். 

இலங்கை அணிக்கு எதிராக ஹம்பன் டோடாவில் நடைபெற்ற முதல் போ   ட்டியில் இந்திய அணி 300 ரன்னைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. 

துவக்கத்தில் இந்த ஆடுகளம் மிக மந்த மாக இருந்தது. விராட் கோக்லி ஆட்ட ம் இழந்ததும் அடுத்தடுத்து சில விக்கெ ட்டுகளை நாம் இழந்து விட்டோம் என்றும் கேப்டன் தெரிவித்தார். 

இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தை நிதானப்பதற்குள் இரண்டு விக்கெட்டு கள் விழுந்து விட்டன. கடைசி கட்டத் தில் இர்பான் பதான் மற்றும் அஸ்வின் இருவரும் சிறிது தாக்குப் பிடித்தாலும், இந்திய அணியின் சரிவை நிறுத்த முடி யவில்லை என்றும் அவர் கூறினார். 

இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனேவிடம் கேட்ட போது, கேப்டன் தோனியின் குற்றச் சாட்டை அவர் மறுத்தார். இலங்கை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சே வெற்றிக்கு காரணம் என்றும் இந்திய அணியின் தோல்விக்கு வீரர்களி ன் தவறான ஷாட் தேர்வே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்