முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபாயகரமான சூழ்நிலையில் புகுஷிமா அணுமின்நிலையம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

நைரோபி,ஏப்.3 - ஜப்பானில் புகுஷிமா அணுமின்சார நிலையம் மிகவும் அபாயகரமான சுழ்நிலையில் இருக்கிறது என்று சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் யூகியா அமானோ தெரிவித்துள்ளார். ஜப்பானில் கடந்த மாதம் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பசிபிக் பெருங்கடலில் சுனாமி வீசி தாக்கியதில் நாட்டின் வடக்குப்பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியது. சுமார் 25 ஆயிரம் மக்கள் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான மக்களை காணவில்லை. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்துக்கொண்டியிருக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் புகுஷிமா அணுமின்நிலையம் பெரும் பாதிப்புக்குள்ளாகி அங்குள்ள அணுஉலைகள் வெடித்து சிதறின. இதனால் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இதனால் புகுஷிமா அணுமின்நிலையம் மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறது என்று அமானோ தெரிவித்துள்ளார். நைரோபியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தலைமை நிர்வாகிகளின் வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் அமானோ கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். ஜப்பானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் உறுதி அளித்துள்ளார். நாம் முதலில் செய்ய வேண்டிய கடமையானது புகுஷிமா அணுமின்சார நிலையத்தில் கதிர்வீச்சை நிறுத்தி அபாயகரமான சூழ்நிலையை போக்க வேண்டும் என்பதுதான் என்றார். 

கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி 14 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலை வீசியதால்தான் புகுஷிமா அணுமின் நிலையம் பாதித்தது. அதனால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் காற்றின் தூய்மை, கடல், மண், உணவுப்பொருட்களின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டதோடு விஷத்தன்மையாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago