டெல்லியில் 3 ஆண்டுகளில் 30 போலீசார் மீது கற்பழிப்பு புகார்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

புதுடெல்லி,பிப்.21 - டெல்லியில் 3 ஆண்டுகளில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்தியாவிலேயே டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. கற்பழிப்பு கடத்தல், பாலியல் தொந்தரவு போன்றவற்றுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் வெளியானது.

தற்போது டெல்லி போலீசாரும் செக்ஸ் குற்றச்சாட்சிகளில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் 30 போலீசார் மீது கற்பழிப்பு மற்றும் செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. இதில் உதவி கமிஷனர்  முதல் போலீஸ்காரர் வரை சம்பந்தப்பட்டு உள்ளனர்.

பெண்களை கற்பழித்தல், பாலியல் பலாத்தகாரம் சிறுமிகளை கற்பழித்தல், பெண்களை அடித்து உதைத்தல், தவறான நடத்தை, கெட்டவார்த்தைகளால் பேசுதல், வரதட்சனை கொடுமை ஆகிய புகார்கள் அடங்கும்.  கடந்த 2007 -ம் ஆண்டு முதல் 2010 செப்டம்பர் மாதம் வரை 33 புகார்கள் இதுபோல் வந்துள்ளது.  இதில் புகார்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. சிலர் மீதான புகார் குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிலர் மீது சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது.

 போலீசார் மீது தொடர்ந்து கூறப்படும் செக்ஸ் குற்றச்சாட்டுகள் உயர் அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீஸ் மீதான மரியாதை குறைந்து விடும் என்பதல் தவறான நடவடிக்கையில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் 70 ஆயிரம் போலீசார் பணிபுரிகிறார்கள். இதில் ஒரு சிலர் மீது இது போன்றபுகார் வருகிறது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: