முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாகும்வரை ஹசாரே குழுவினர் 2-வது நாளாக உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.27 - ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே குழுவினர் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் மக்கள் கூட்டம் குறைந்தது. ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா கசாரே குழுவினர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் உடல்நிலை சரியில்லாததால் ஹசாரே கலந்துகொள்ளவில்லை. அவரது குழுவில் உள்ளவர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதல் உண்ணாவிரதத்தின்போதும் கூட்டம் முன்பு இருந்தது மாதிரி இல்லை ஓரளவுக்குத்தான் அதாவது 2500 முதல் 3000 பேர் வரை மட்டுமே கலந்துகொண்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். நேற்று அதை விட குறைந்துவிட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர். நேற்றுக்காலையில் சுமார் 600 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால் உண்ணாவிரத்தில் அதிகம் பேர் கலந்துகொள்வார்கள் என்று குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

எம்.பி.க்களை கிரிமினல், கற்பழிப்பாளர்கள் என்று தாக்கி பேசிய குழுவில் உள்ள உறுப்பினர் கேஜரிவால் மீது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இந்த வழக்கில் ஆஜராகுவதற்காக அரவிந்த் கேஜரிவால் நேற்று சென்றுவிட்டார். அன்றே அவர் திரும்பி மாலையில் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார். கோர்ட்டுக்கு போகும்முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த கெஜரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்த மாதிரியான எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு சென்றால் மக்களுக்கு நல்ல எதிர்காலம் இல்லை என்றார். நான் தவறு செய்ததாக நினைக்கவில்லை. நான் உண்மையைத்தான் பேசி உள்ளேன். இதனால் வரும் எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அண்ணா ஹசாரே நேற்று பகல் 11 மணி அளவில் உண்ணாவிரதம் இருக்கும் மேடைக்கு வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்