முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்: அபுஜிண்டால்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை. 29 - இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்த லஸ்கர் இ தொய்பா திட்டமிட்டு இருந்ததாக தீவிரவாதி அபுஜிண்டால் தெரிவித்துள்ளான்.  கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கரமான தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் உயிரோடு பிடிபட்டான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டெல்லியில் சமீபத்தில் அபு ஜிண்டால் என்ற முக்கிய தீவிரவாதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டான். இவனுக்கு மும்பை தாக்குதல் சம்பவம் உட்பட பல்வேறு தாக்குதல் வழக்குகளில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசாரிடம் இருந்த அபுஜிண்டாலை கோர்ட் உத்தரவுப்படி மும்பை தீவிரவாத தடுப்பு போலீசார் தங்களிடம் அபுஜிண்டாலை எடுத்துக் கொண்டனர். பிறகு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அபுஜிண்டால் ஆஜர்படுத்தப்பட்டு இம்மாதம் 31 ம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. தற்போது அபுஜிண்டாலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் குறைந்தபட்சம் 10 இடங்களில் தாக்குதல்களை நடத்த லஸ்கர் இ தொய்பா திட்டமிட்டிருந்ததாக அபுஜிண்டால் கூறினான். லஸ்கர் இ தொய்பா இயக்கத்தில் தான் தீவிரமாக ஈடுபட்டு வந்ததை அவன் ஒப்புக் கொண்டான். இந்த தகவலை மும்பை சி.பி.ஐ. அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அபுஜிண்டால் அவுரங்காபாத், புனே போன்ற இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களிலும் தொடர்புடையவன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்