முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பாதுகாப்பு நிலை குறித்து அந்தோணி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர். ஜூலை. 29  - காஷ்மீர் மாநிலத்தில்  பாதுகாப்பு நிலை குறித்து  அதிகாரிகளுடன் மத்திய  பாதுகாப்பு  துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆய்வு நடத்தினார். மத்திய பாதுகாப்பு  துறை அமைச்சர்  ஏ.கே. அந்தோணி நேற்று இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் மாநிலம் சென்றார்.  அவருடன்  மத்திய பாதுகாப்பு துறை  செயலாளர் சதி காந்த் சர்மா, ராணுவ  தளபதி  விக்ரம்  சிங் ஆகியோரும்  காஷ்மீர் சென்றனர்.

காஷ்மீரில் அந்தோணியை காஷ்மீர்  மாநில அமைச்சர்கள்  ஆர்.எஸ்.சிப், நசீர் அஸ்லாம் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் நடந்த ஒரு கூட்டத்தில்  காஷ்மீர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ராணுவ  அதிகாரிகள் ஆகியோருடன் அந்தோணி ஆலோசநை நடத்தினர்.

கடந்த 18 மாதங்களுக்கு பிறகு  அந்தோணி  இப்போதுதான் முதல் முறையாக காஷ்மீர் வந்துள்ளார்.

பிறகு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோராவுடனும்  அவர் ஆலோசனை நடத்தினார்.

இன்றும்  காஷ்மீரில்  தங்கியிருக்கும் அந்தோணி  எல்லை பகுதியில் உள்ள முன்னணி பகுதிகளுக்கும்  சென்று ராணுவத்தினரின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துரார்.

இந்திய ராணுவத்தின் முக்கிய  நிலைகள் சிலவற்றுக்கும் அந்தோணி சென்று அங்குள்ள நிலைமைகளை கண்டறிவார்.

 ஆயுதப்படை  சிறப்பு அதிகார சட்டம் குறித்தும்  அதிகாரிகளுடன் அந்தோணி  இன்று ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தோணி  காஷ்மீர் பயணத்தை மேற்கொண்டிருக்கம் நேரத்தில்  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.  இதை அடுத்து  அந்தோணிக்கு  கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞரை  ராணுவத்தினர்  சுட்டுக்கொன்ற  சம்பவத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து நேற்று  இந்த ரேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago