முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலவரம் பாதித்த அசாமில் 11,000 பாதுகாப்பு வீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, ஜூலை. 29 ​ - கலவரத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தில் தற்போது மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. நேற்று இம்மாநிலத்தின் எந்த பகுதியிலும் எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ராணுவ வீரர்கள் கொடியணிவகுப்பு நடத்தினார்கள். 

அசாம் மாநில போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் நிலைமையை உன்னிப்பாக அரசு கவனித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரை குவிக்க மாநில அரசுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. மேலும் மருத்துவ குழுவினர் மற்றும் மருந்து பொருட்கள் அடங்கிய விமானம் ஒன்றையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இம்மாநில மக்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என்று பிரதமரும் உறுதியளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago