முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 400 கோடி ஊழல்: குஜராத் அமைச்சர் மீது வழக்கு

திங்கட்கிழமை, 30 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

அகமதாபாத், ஜூலை. - 30 - குஜராத் மாநிலத்தில் மோடி அமைச்சரவையில் மீன்வளத்துறை இணை அமைச்சராக இருப்பவர் புருஷோத்தம் சோலங்கி. இந்த துறை சார்பில் நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளில் மீன் பிடிக்க குத்தகைக்கு விடப்பட்டது. இந்த முடிவுக்கு அப்போதைய தலைமை செயலாளர் ராஜகோபாலன் எதிர்ப்பு தெரிவித்தார். இதை பொருட்படுத்தாமல் மீன்பிடி காண்டிராக்ட் விடப்பட்டது. இந்த விவகாரத்தில் ரூ. 400 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று இசாக் மராடியா என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.  இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட்டுக்கு அரசு அளித்த பதிலில் சோலங்கிக்கு எதிராக வழக்கு எதுவும் இல்லை. மீன்பிடி காண்டிராக்டில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று கூறியிருந்தது. இதையடுத்து இசாக், ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்தார். அதன் மீது முடிவெடுத்து அறிவிக்குமாறு கவர்னர் கம்லா பெனிவாலை ஐகோர்ட் கேட்டுக் கொண்டது. முந்தைய தலைமை செயலாளர் ராஜகோபாலனின் குறிப்பை ஆராய்ந்த கவர்னர் அரசின் கொள்கைக்கு விரோதமாக மீன் பிடிக்க அமைச்சர் சோலங்கி அனுமதி வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் அமைச்சர் சோலங்கி மீது வழக்குத் தொடரலாம் என்று கவர்னர் கோர்ட்டுக்கு பரிந்துரை வழங்கினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்