முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி,ஏப்.3 - அசாம் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்றுமாலையுடன் முடிவடைந்தது. 62 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகம், புதுவை, கேரளம், அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டசபைக்கு நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. இதில் 62 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 64 தொகுதிகளுக்கு வருகின்ற 11-ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக நாளை நடக்கும் 62 தொகுதிகளிலும் நேற்றுமாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், அசாம் கனபரிஷத், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரசாரம் செய்தனர். பாரதிய ஜனதா வேட்பாளர்களை அந்த கட்சியின் நிதீன்கட்காரி உள்பட பல தலைவர்கள் பிரசாரம் செய்தனர். நாளை ஓட்டுப்பதிவு நடக்கும் 64 தொகுதிகளில் 485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அசாமில் உல்பா உள்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago