முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜர்க்ராம், ஏப். 3 - மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதுனாப்பூர் மாவட்டத்தில் ஜர்க்ராம் பகுதியில் உள்ள குரித்தாகாம் கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பிரபாத் மஹாட்டோ ( வயது 42. ) இவர் சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரு குளத்தில் குளிக்கச்  சென்றார். அப்போது ஆயுதங்களுடன் அங்கே வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்று அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

பிறகு அவரது சடலத்தை சாலை ஓரம் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.  அந்த கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் கிடந்த அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆசிரியர் இடது கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆசிரியரை சுட்டுக்கொல்வதற்கு முன்பாக அவரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடுமையாக அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்துள்ளனர் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியரை சுட்டுக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக உயர்  போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago