முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி விவகாரத்தில் சட்டம்தன் கடமையை செய்யும்: காங்.

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. - 31 - தயாநிதி மாறன் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.  2004 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவன பங்குகளை விற்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்றும் இதனால் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.  மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவனம் கைமாறியதும் உடனடியாக தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார் என்றும் அதற்கு கைமாறாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தில் 550 கோடி ரூபாய் முதலீடு செய்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தயாநிதி மாறன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறனிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறும் போது, ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் தயாநிதி மாறனை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்த கருத்தின் மூலம் தயாநிதி மாறன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago