முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர்ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜூலை.- 31 - தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிபத்து பற்றி அறிந்ததும் பிரதமர் மன் மோகன்சிங் அதிர்ச்சி அடைந்தார். ரெயில்வே அமைச்சர் முகுல்ராயுடன் டெலிபோனில் பேசி விபத்து பற்றி கேட்டறிந்தார். பின்னர் ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிட்டார். ரெயில் அமைச்சர் முகுல்ராய் விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக நெல்லூர் விரைந்தார். நேற்று பிற்பகலில் அவர் விபத்து நடந்த இடத்துக்கு சென்று எரிந்த ரெயில்பெட்டியை பார்வையிட்டார். அவரிடம் ரெயில்வே அதிகாரிகள் தீ விபத்து பற்றி விளக்கி கூறினார்கள். அதன்பிறகு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக ரெயில்வே அமைச்சர் முகுல்ராய் நிருபர் களிடம் கூறியதாவது:​ தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றாலும் இதில் முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்துவார். ரெயில் விபத்து பற்றி பிரதமர் என்னிடம் பேசி அனுதாபம் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரெயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்