முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாமாயில் ஊழல் வழக்கை எதிர்த்து ஐகோர்ட்டில் அச்சுதானந்தன் வழக்கு

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

கொச்சி. ஆக. - 1 - பாமாயில் ஊழல் வழக்கில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றமற்றவர் எனக்கூறி  சிறப்பு கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து  கேரள ஐகோர்ட்டில் அம்மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கேரளாவில் கடந்த 1991 - 92 ம் ஆண்டு மலேசியாவில் இருந்து  15,000 டன் பாமாயில் எண்ணை இறக்குமதி செய்யப்பட்டது. இதில் ரூ. 2.32 கோடிக்கு  கேரள அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் பல முறைகேடுகள்  நடந்துள்ளதாகவும்  கூறப்படுகிறது.  இந்த முறைகேடுகள் நடந்த போது கேரளாவில்   காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போதைய முதல்வர் கருணாகரன் அமைச்சரவையில்  உம்மான் சாண்டி  நிதி அமைச்சராக இருந்திருக்கிறார்.  இடது கம்யூனிஸ்டு  கட்சி  தலைமையிலான ஆட்சியின் போது இந்த பாமாயில்  ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் உம்மன் சாண்டியின் பெயரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது  இந்த  வழக்கில் திருச்சூர் சிறப்பு  கோர்ட்டில் தீர்ப்பு  கூறப்பட்டது.  இந்த ஊழல் வழக்கில் இப்போதைய முதல்வர்  உம்மன் சாண்டி குற்றமற்றவர் என்று கூறி  அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. திருச்சூர் சிறப்பு கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய  எதிர்க்கட்சி  தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த ஊழல்  உம்மண் சாண்டி நிதி அமைச்சராக இருந்த போது நடந்துள்ளது. எனவே அவரையும் இந்த ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும்  திருச்சூர் சிறப்பு  கோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்ட ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ். சதீஷ் சந்திரன்  இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி  கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago