முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவையில் இலாகா மாற்றம் ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சரானார்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 1 - மத்திய அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்திற்கு நிதி இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி அவருக்கு மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது. ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசா, மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து ஏர்செல் நிறுவனம் கைமாறிய விவகாரத்தில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் மத்திய நிதி இணை அமைச்சராக இருக்கும் பழனிமாணிக்கத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பிரதமரை தி.மு.க.தலைவர் கருணாநிதி வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.  ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றுள்ளார். அதனால் அவர் ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவர் வகித்த நிதி இலாகாவும் காலியாக இருந்தது. அதனால் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இருந்தார். ஆனால் புதிய அமைச்சர்களை சோனியா விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் மத்திய அமைச்சரவையில் இலாகா மாற்றம் மட்டுமே பிரதமர் மன்மோகன் சிங் செய்துள்ளார். உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு நிதி இலாகா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் வகித்த உள்துறை இலாகா சுஷில்குமார் ஷிண்டேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சராக இருக்கும் கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு கூடுதலாக மின்சாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கிடையில் பிரணாப் முகர்ஜிக்கு அடுத்து மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாருக்கு ஏமாற்றம்தான். சோனியாவின் நெருக்கமாக இருக்கும் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணிக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ப.சிதம்பரத்திற்கு மீண்டும் இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டிருப்பதால் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது. பிரதமருக்கு அடுத்து துணைப்பிரதமர் இல்லாவிட்டால் யார் நிதி இலாகாவை வைத்திருக்கிறாரோ அவருக்கு இரண்டாவது இடம் கொடுப்பது மரபு. ஆனால் சோனியா காந்தியின் கருணை கிடைக்க வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்