முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத குடிபெயர்தல்தான் அசாம் கலவரத்திற்கு காரணம்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி,ஆக.- 1 - அசாம் மாநிலத்தில் நடந்த இன கலவரத்திற்கு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருவதுதான் காரணமாகும் என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.  அசாம் மாநிலத்தில் இனக்கலவரம் வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்திற்கு காரணம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமிற்குள் குடிபெயர்ந்து வருவதுதான் என்று எல்.கே. அத்வானி கூறினார். கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கோஹ்ரஜ்ஹர் மாவட்டத்திற்கு அத்வானி சென்று பார்வையிட்டார். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கவுகாத்திக்கு வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் தங்களை தாக்கலாம் என்று அசாம் மக்கள் அஞ்சுகின்றனர். சட்டவிரோதமாக அசாமிற்குள் வருவதை அந்த மாநில காங்கிரஸ் அரசால் முடியவில்லை என்று அத்வானி கடுமையாக குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளது. கோஹ்ரஜ்ஹர் பகுதிக்கு சென்று நான் பார்த்தேன். அப்போது ஏராளமானோர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பண்டிட்கள் போல் நமது நாட்டுக்காரர்களே அகதிகளாக இருக்கக்கூடாது என்றும் அத்வானி மேலும் கூறினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்