முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நேற்று 2-வது நாளாக மின்சப்ளை பாதிப்பு

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.- 1 - தலைநகர் டெல்லியிலும் அதனை சுற்றியுள்ள இதர மாநிலங்களில் சில பகுதிகளிலும் நேற்று மின்சார சப்ளை இல்லை. இதனால் அந்த பகுதிகள் பல மணி நேரம் இருளில் மூழ்கி இருந்தன.  டெல்லியில் நேற்றுமுன்தினம் இரவில் வடமாநில மின் மண்டல தொகுப்பில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லி உள்பட 7 வட மாநிலங்களில் அடியோடு மின்சார சப்ளை இல்லை. டெல்லி, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, இமாசலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள்  இருட்டில் மூழ்கின. அந்த மாநிலங்களில் மாமூல் வாழ்க்கை அடியோடு பாதித்தது. வழக்கமான நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. போக்குவரத்து கடுமையாக பாதித்தது.  மின்சார அதிகாரிகளின் கடும் முயற்சியால் மின்தொகுப்பில் கோளாறை சரிசெய்தனர். மீண்டும் மின்தொகுப்பில் கோளாறு ஏற்பட்டதால் தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள இதர மாநிலங்களிலும் மின் சப்ளை இல்லை. அதனால் அந்த பகுதிகள் நேற்றும் இரண்டாவது நாளாக இருளில் மூழ்கின. நேற்று நள்ளிரவு சரியாக 1.30 மணிக்கு மின்தொகுப்பில் கோளாறு ஏற்பட்டது. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள இதர மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்கு மின்சப்ளை பாதிக்கப்பட்டதோடு அசாம், சிக்கிம் மாநிலங்களிலும் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டெல்லி மெட்ரோ ரயில்கள் பல மணி நேரம் ஓடாமல் இருந்தன.  மின்சார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் டெல்லிக்கு மட்டும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் மெகாவட் மின்சாரம் தேவை. ஆனால் 38 மெகாவட் மின்சாரம்தான் சப்ளை செய்யப்பட்டது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்