முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. - 1 - தற்போதைய வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொருளாதார நிலவரம் திருப்திகரமாக இல்லை. பணவீக்கம் குறையவில்லை. இத்தகைய பின்னணியில் வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கலாமா? அல்லது இப்போது மாற்றம் எதையும் செய்ய வேண்டாமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தியது. வட்டி விகிதத்தை குறைத்தால் வளர்ச்சி அதிகரிக்கும் என்றாலும், அதை விட அதிகமாக பணவீக்கம் உயரும் சாத்தியம் உள்ளதால் இப்போது மாற்றம் ஏதையும் செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது. எனவே இப்போதுள்ள வட்டி விகிதம் தொடரும். மாற்றம் ஏதும் அமலாக்கப்பட மாட்டாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் அறிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்