முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம்:

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 2 - உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் இருந்து எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் என்று அண்ணா ஹசாரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அண்ணா ஹசாரே குழுவினர் கடந்த 8 நாட்களாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த உண்ணாவிரதத்தில் கடந்த 4 நாட்களாக கலந்துகொண்டுள்ள அண்ணா ஹசாரே நேற்று உண்ணாவிரத மேடையில் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.  அப்போது அவர் கூறுகையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலிருந்து எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் மத்திய அரசுடன் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் வரமாட்டோம் என்றார். லோக்பால் மசோதாவில் பெரும் மாற்றத்தை கொண்டுவர சதி நடப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது என்றும் ஹசாரே தெரிவித்தார். கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அரவிந்த் கேஜரிவால், கோபால் ராய் ஆகியோர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களை உண்ணாவிரதத்தை கைவிடும்படி ஹசாரே கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். உண்ணாவிரதம் இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் உண்ணாவிரதத்தை கைவிடும்படி செய்ய மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. அதனால் கடும் நிலையை கைக்கொள்ளுவது குறித்து குழுவினர்களுடன் ஹசாரே ஆய்வு நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஹசாரே பலமான லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்றார்.  உண்ணாவிரதம் இருந்து வரும் அரவிந்த் கேஜரிவாலால் மத்திய அரசுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. அவர் நாட்டின் நலனுக்காக போராடி வருகிறார். உண்ணாவிரதம் இருந்து வருபவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல சதி நடக்கிறது. இது நடக்காது. எங்களை மத்திய அரசானது வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் அரசு பிரதிநிதிகள் யாருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தமாட்டேன். எங்களுக்கு பலம் இருக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று ஹசாரே மேலும் கூறினார். எங்களுக்கு அரசு டாக்டர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கேஜரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்