முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதிவிலையில் டீசல் வினியோகிக்க திட்டம்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடிடல்லி, ஆக. - 2 - வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதி விலையில் டீசல் வினியோகம் செய்ய மத்திய  அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை மிகவும் காலதாமதமாக துவங்கியது. இதன் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு  தென் மேற்கு பருவ மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு பருவ மழை 20 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையங்கள் கூறியுள்ளன. இதன் காரணமாக கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் கிட்டத்தட்ட 627 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் போதுமான அளவில் பருவ மழை பெய்யாததால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் மிகுந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வேலும் இந்த மாநிலங்களில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.  கால்நடைகள் தீவனங்கள் இன்றி பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம்  கருத்தில் கொண்டு விவசாயத்திற்கான அதிகாரம் படைத்த மத்திய அமைச்சரவை கூட்டம் அதன் தலைவரும் வேளாண் துறை அமைச்சருமான சரத் பவார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பாதி விலையில் டீசல் வினியோகம் செய்யப்படும் என்றார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள  மாநிலங்களுக்கு ரூ.2000 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். காரீப் பயிர் சாகுபடிக்கு ரூ. 1440 கோடியும் குடிநீர் அபிவிருத்திக்காக ரூ. 473 கோடியும்,  கால்நடை  தீவன உற்பத்திக்காக ரூ. 50 கோடியும் வாங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் விதைகளுக்கு அளிக்கப்படும் மானியம் அதிகரிக்கப்படும் என்றும் அவர்  கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்