முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் மின்தடை 2 நாட்களுக்கு பிறகு சீரானது

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 2- டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில்  ஏற்பட்டிருந்த மின் தடை இரண்டு நாட்களுக்கு பிறகு சீர்  செய்யப்பட்டது. மத்திய  மின்  தொகுப்பில் ஏற்பட்ட  குளறுபடி காரணமாக டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 20 வட மாநிலங்களில் திடீர் என்று மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.  இதன் காரணமாக இந்த மாநிலங்களில் 60 கோடி மக்கள்  மின்சாரம் இல்லாமல் தவிப்புக்கு உள்ளாகினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  வட மாநிலங்கள் இருளில் மூழ்கியதற்கு மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில்  மத்திய மின் துறை அமைச்சராக வீரப்ப மொய்லி  நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  வட மாநிலங்களில் ஏற்பட்ட மின் சப்ளை  துண்டிப்பை  உடனடியாக சீர்செய்யுமாறு  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து இந்த மின் துண்டிப்பு நேற்று சீரானது. மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கத்தொடங்கின. டெல்லி உள்ளிட்ட வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் நேற்று மின் வினியோகம் சீர் செய்யப்பட்டதாக மின் துறை அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், உள்ளிட மாநிலங்களில் சுரங்க பணிகள்  மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.
மின் தடையால் பாதிக்கப்பட்டிருந்த தொழிற்சாலை இயக்கங்கள் மீண்டும் செயல்பட துவங்கின.
மேலும் மின் உற்பத்தியை  அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிந்றன என்றும் மின் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. கடந்த 2 நாட்களாக நிலவிய மின்  தடைக்கு தன்னை குற்றம் சுமத்த  முடியாது என்றும் மத்திய  அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து  செயல்பட்டு  இந்த நெருக்கடிக்கு  தீர்வு கண்டுள்ளன என்றும் மின் துறை  இலாகா பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள  அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
இந்தியா முழுவதும் மின் பற்றாக்குறை இருந்து வருகிறது. மின்சார சப்ளை மீண்டும் சீரானதை தொடர்ந்து  20 மாநிலங்களிலும்  சகஜமான மின் சப்ளை தொடங்கியது.  இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago