முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய-மாநில அரசுகளிடையே சுமூகமான உறவு வேண்டும்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 2 - மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சமநிலை சாதாரணமானதாகவும் சுமூகமான முறையிலும் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்தறள சுஷில்குமார் ஷிண்டே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சமநிலை சாதாரணமாகவும் சுமூகமான முறையிலும் இருக்க வேண்டும் என்றார். மத்திய அமைச்சரவையில் நான் ஒரு அங்கமாக இருக்கிறேன். நாட்டின் சூழ்நிலையை நன்கு தெரிந்து வைத்துள்ளேன். நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதனால் மாநில அரசுகளுடன் நாங்கள் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும். மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வேன். நான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேன். நக்சலைட்கள் பிரச்சினைகள் உள்பட  எனக்கு அனைத்தும் நன்றாகவே தெரியும். தற்போதுள்ள நிலவும் சூழ்நிலை குறித்து தெரிய வேண்டும். உள்துறை மிகவும் முக்கியமான பொறுப்பாகும். எந்த நேரமும் உஷாராக இருக்க வேண்டும் என்று ஷிண்டே மேலும் கூறினார். மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்த ஷிண்டே, ஆந்திர கவர்னராக நியமிக்கப்பட்டார். பின்னர் மத்திய மின்சாரத்துறை அமைச்சரானார். தற்போது உள்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார். உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிதி அமைச்சராகி உள்ளார். மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லிக்கு கூடுதலாக மின்சார துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago