முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே குண்டு வெடிப்பு குற்றவாளிகளை பிடிக்க முயற்சி

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புனே, ஆக.3 - மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பங்கள் நாடு முழுவதும் பெரும்  பீதியை கிளப்பியுள்ளன. புனே நகரில் உள்ள தேனா பேங்க், மெக் டொனால்டு  சதுக்கம்,  கந்தர்ரா உள்ளிட்ட 4 இடங்களில் 45 நிமிடங்களில் இந்த சக்தி குறைவான வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த சம்பவத்தில்  யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும்  3 பேருக்கு  காயம் ஏற்பட்டது.

இந்த தொடர் குண்டு வெடிப்பு நடந்த  இடங்களில் வைக்கப்பட்டிருந்த சி.சி. டி.வி கேமிராக்களை போலீசார்  சோதித்து பார்த்தனர்.

ஆனால் இந்த சி.சி.டி.வி கேமிராக்கள் எதுவும் சம்பவம் நடந்த போது இயங்கவில்லை என்று அதிகாரிகள்  கூறினர்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் டெய்லர் ஒருவரை  சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்து  வருகின்றனர்.

ஒரு இடத்தில்  சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்த 4 இடங்களிலும்  வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமிராக்களில் பெரும்பாலானவை இயங்கவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இதனால்  குற்றவாளிகளை  கண்டுபிடிப்பதில்  போலீசாருக்கு  சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு படையினர்,  நகர காவல் துறை படையினர், தேசிய புலனாய்வு படையினர் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்களில்  குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது  எல்லாமே சைக்கிளில்தான்.  இந்த சைக்கிள்கள் அனைத்தும் புதிதாக வாங்கிய  சைக்கிள்கள் என்றும்  இந்த சைக்கிகள்கள் எந்த கடைகளில் இருந்து வாங்கப்பட்டன என்பது குறித்தும் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த இடங்களில்  தடவியல் நிபுணர்கள்  தொடர்ந்து  சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

குண்டுகளை வெடிக்க செய்ய பேட்டரியால்  இயங்கும்  டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார்  தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த  தயானந்த் பாட்டீல்  மருத்துவ மனையில்  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

புனேயில் குண்டு வெடித்த இடங்களை பார்வையிட்ட மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்