முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி...!

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக்.3 - உலகிலேயே அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் டோனி முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தை சச்சின் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் சம்பளத்தை தவிர விளம்பரங்கள், தொழில்கள் என்று பல துறைகளில் வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் கிரிக்கெட் வருமானத்தை விட விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் போர்ப்ஸ் இதழ், உலகில் அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களை, 6இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் கேப்டன் டோனி உள்ளார். இவருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஆண்டிற்கு 35 லட்சம் அமெரிக்க டாலர் கிடைக்கிறது. ஆனால் அவர், விளம்பரங்கள் மூலம் ஆண்டிற்கு 2 கோடியே 30 லட்சம் சம்பாதிக்கிறார். விளம்பரங்களில் நடித்து அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலிலும் டோனி தான் முதலிடம்.  டோனியின் ஆண்டு வருமானம் 2 கோடியே 65லட்சம் டாலராகும். 

இப்பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தவர் சச்சின். இவரது ஆண்டு வருமானம் 1 கோடியே 86 லட்ச டாலராகும். இதில் விளம்பரங்கள் மூலம் 1கோடியே 65 லட்சம் டாலர் கிடைக்கிறது. மீதமூள்ள தொகை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் சச்சினுக்கு கிடைக்கிறது. இதே போல கவுதம்கம்பீர் (73லட்சம் டாலர்), விராத் கோக்லி (71 லட்சம் டாலர்), ஷேவாக் (69லட்சம் டாலர்), யூசுப்பதான் (37லட்சம் டாலர்) ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.

வெளிநாட்டு வீரர்கள் ஷேன்வாட்சன் (59 லட்சம் டாலர்), மைக்கேல் கிளார்க் (49 லட்சம் டாலர்), பிரட்லீ (48 லட்சம் டாலர்), ரிக்கி பாண்டிங் (41 லட்சம் டாலர்) ஆகியோர் டாப்10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்