முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே குழுவினர் உண்ணாவிரத்தை நிறுத்த திடீர் முடிவு...!

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.3 - அண்ணா குழுவினர் உண்ணாவிரத்தை இன்று மாலையுடன் முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஊழலை அரசியல் ரீதியாக எதிர்த்து போராடவும் முடிவு செய்துள்ளனர். வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரியும் 3 மத்திய அமைச்சர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்கக்கோரியும் கடந்த 25-ம் தேதி முதல் அண்ணா குழுவினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். அண்ணா ஹசாரே மட்டும் உடல்நிலை காரணமாக கடந்த 29-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். அண்ணா குழுவினர்களுக்கு முதலில் ஓரளவே ஆதரவு இருந்தது. பின்னர் படிப்படியாக ஆதரவு பெருகியது. தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அண்ணா ஹசாரே எங்களை மிரட்டி பணியவைக்க முடியாது என்றார். இதற்கிடையில் முதலில் உண்ணாவிரதத்தை தொடங்கிய அரவிந்த் கேஜ்ரிவால்,கோபால் உள்பட 3 பேர்களின் உடல்நிலை மோசமாக போய்விட்டது. இதுகுறித்து குழுவினர்களுடன் ஹசாரே நேற்றுக்காலையில் ஆலோசனை நடத்தினார். மேலும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்பத்திரிக்கு வாருங்கள் என்று உடல்நிலை பாதிக்கப்பட்ட குழுவினர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை இன்றுமாலையுடன் முடித்துக்கொள்ள அண்ணா குழுவினர் அறிவித்துள்ளனர். ஊழலை எதிர்த்து அரசியல் ரீதியாக போராடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனால் அண்ணா குழுவினர் தனி கட்சி தொடங்கலாம் என்று தெரிகிறது. மக்களின் கருத்து கேட்டறிந்த பின்னரே எந்த முடிவும் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்