முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்று தேவியர் சுற்றுலா: அமைச்சர் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.3 - ஆடி மாதத்தில் ஆன்மிக பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று தேவியர் சுற்றுலாவை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னையை சுற்றியுள்ள மீஞ்சூர் திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் ஆகிய அம்மன் கோயில்களைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா ஆடி மாதம் முழுவதும் காலை 7.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும்.

இதற்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.375 ஆகும். விவரங்களுக்கு சென்னை வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தை நேரிலோ அல்லது 25384444, 25383333, 25389857 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தில் மூன்று தேவியர் சுற்றுலாவை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்