முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பாதி நிலங்கள் இருளில் மூழ்கி தவிப்பது ஏன்?

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஆக.3 - இந்தியாவின் பாதி மாநிலங்கள் கடும் மின்வெட்டால் இருளில் மூழ்கி தவிப்பதற்கான காரணம் குறித்து மின்தொகுப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  வடக்கு மின் தொகுப்பில் அதிர்வெண் 49.5 ஹெட்ஸ்க்கு கீழே செல்லும் போதெல்லாம் மின்விநியோகம் கடுமையாகப் பாதிக்கும் நிலை உருவாகும். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தர்காண்ட், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கான மின் ஒதுக்கீட்டை விட கூடுதலாக மின்சாரத்தை உறிஞ்சும் போதெல்லாம் வடமின் தொகுப்பு சார்பில் கடந்த ஜூன் மாதம் முதல் ஜூலை மாத நடுப்பகுதி வரை பல முறை முன்னெச்சரிக்கை நோட்டீஸ் இந்த மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் வட மின் தொகுப்பு மின்சாரத்தை அப்படியே கபளீகரம் செய்த உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் 402 முறை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரியானாவுக்கு 265 முறையும், பஞ்சாப் 227, உத்தர்காண்ட் 154, ஜம்மு காஷ்மீர் 119, ராஜஸ்தான் 70, இமாச்சலப் பிரதேசம் 20 மற்றும் டெல்லிக்கு 5 முறை என எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, ஜூலை 10 ம் தேதி முதல் 16 ம் தேதி வரையில் உத்தரப் பிரதேச மாநிலம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை விட 31 முறை அளவுக்கு அதிகமாக மின்சாரத்தை உறிஞ்சித் தள்ளியிருக்கிறது. உத்தர்காண்ட் மாநிலம் 19 முறையும், அரியானா 17 முறையும், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலம் 15 முறையும், டெல்லி 3 முறையும், ஜம்மு காஷ்மீர் 2 முறையும், இமாச்சலப் பிரதேசம் ஒருமுறையும் அளவுக்கு அதிகமாக போட்டி போட்டுக் கொண்டு மின்சாரத்தை உறிஞ்சி எடுத்திருக்கின்றன.

இதனால்தான் குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு கீழே மின்சாரம் போக பாதி மாநிலங்கள் இருளில் மூழ்கி தவியாய் தத்தளித்திருக்கின்றன. வடக்கு மின்தொகுப்பில் இருந்து மிக அதிகளவு மின்சாரத்தை எடுக்கக் கூடாது என்று உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஒரு மாதத்தில் 402 முறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக வடக்கு மண்ட மின்தொகுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்