முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா ஹசாரே குழுவினர் 10 நாள் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டனர்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 4 - ஊழலுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக இருந்த உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே குழுவினர் நேற்றுமாலையுடன் நிறுத்திக்கொண்டனர். ஊழலுக்கு எதிராக போராட புதிய அரசியல் கட்சியை தொடங்கவும் முடிவு செய்துள்ளனர்.  நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றவும் 3 மத்திய அமைச்சர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தியும்  அண்ணாஹசாரே தலைமையில் அவர்களது குழுவினர் கடந்த 25-ம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதத்தை தொடங்கினனர். அண்ணாஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, கோபால் உள்பட பலர் கடந்த 25-ம் தேதியே உண்ணாவிரதத்தை தொடங்கிவிட்டனர். ஹசாரே மட்டும்  கடந்த 6 நாட்களுக்கு முன்புதான் உண்ணாவிரதத்தை தொடங்கினார். உண்ணாவிரதத்தின்போது கிரண்பேடி, அரவிந்த கேஜ்ரிவால் உள்பட 4 பேர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் பலமான லோக்பால் மசோதா பற்றி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால் உண்ணாவிரதத்தை நேற்று மாலையுடன் முடித்துக்கொண்டனர்.  இந்தநிலையில் ஊழலை எதிர்த்து போரிடுவதில் புதிய வழிமுறையை கையாள அண்ணா குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஊழலை எதிர்த்து அரசியல் ரீதியாக போராடப்படும் என்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசரே கூறினார். இதற்காக காங்கிரஸ்-பாரதிய ஜனதாஇல்லாத ஒரு அரசியல் கட்சியும் உருவாக்கப்படும் என்றும் ஹசாரே மேலும் கூறினார்.  புதிய அரசியல் கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் தமிழக மக்களே உறுதி செய்வார்கள் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்