Idhayam Matrimony

பேரப்பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் திணறிப் போகிறேன்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஆக. - 4 - தற்போது சிறுவர்கள் பிரகாசமாக இருக்கிறார்கள். அறிவுப் பூர்வமாக இருக்கிறார்கள். என் பேரன், பேத்தி கேட்கும் கேள்விக்கே என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே அவர்களுக்கேற்ற திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக சட்டசபையில் கல்வித்துறை தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு எடியூரப்பா பேசுகையில், தற்போது ஆரம்பக் கல்வி அளவில் அரசுப் பள்ளிகளில் உள்ள கல்வியின் தரம் மிகவும் மோசமாகவே உள்ளது. இதனால்தான் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பி வருகின்றனர். தற்போது உள்ள குழந்தைகள் ஐக்.யூ அளவில் மிகப் பிரமாதமாக உள்ளனர். எனவே சாதாரண முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களால் இவர்களை சமாளிக்க முடியாது. நல்ல தரமான, திறமையான, குழந்தைகளின் அறிவுப் பசிக்குத் தீனி போடக் கூடியவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு எனது பேரப் பிள்ளைகள்தான் சரியான அளவுகோல். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதிலே அளிக்க முடியவில்லை. திணறிப் போய் விடுவேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்