முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் 9 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், ஆக. - 4 - ஒடிசா அமைச்சரவையில் 5 பேரை நீக்கி விட்டு 9 பேரை புதிய அமைச்சர்களாக நியமனம் செய்திருக்கிறார் முதல்வர் நவீன்பட்நாயக். அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பாக 5 அமைச்சர்களையும் ராஜினாமா செய்யவும் நவீன்பட்நாயக் கட்டளையிட்டிருந்தார். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில், தாமோதர் ராட், பிஜய்ஸ்ரீ ரவுத்ரி, கல்பதரு தாஸ் ஆகிய மூவரும் கேபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இவர்களைத் தொடர்ந்து பிரதாப் கேசரி தேவ், சரோஜினி ஹெம்ப்ராம், ரபி நாரயண் நந்தா, அருண் சாகு, ரஜினிகாந்த்சிங், சுப்ரதா தராய் ஆகியோர் இணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நிதியமைச்சர் பிரபுல்லா கடாய், சுற்றுலா அமைச்சர் சமால், மின்துறை அமைச்சர் அட்டனு சபியாச்ச்சி நாயக், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் புஷ்பேந்திரா சிங்தேவ் மற்றும் கல்வியமைச்சர் பிரதாப் ஜேனா ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago