முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரேவின் முடிவுக்கு பாரதீயஜனதா கட்சி வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 5 - தீவிர அரசியலில் குதிக்கப்போவதாக அன்னா ஹசாரே எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக  பாரதீய ஜனதா கட்சி  கூறியுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவும் அவரது குழுவினரும்  தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக  கூறியுள்ளனர். இதற்கு  பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில் பாரதீய ஜனதா கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளது.  பா.ஜ.க.வின்  தலைமை செய்தி தொடர்பாளர் ரவி  சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம்  கூறுகையில்  அரசியல் கட்சியை துவக்க நமது அரசியல்சாசனம் அனுமதி அளிக்கிறது.  அதன்படி  அன்னா ஹசாரே குழுவினர்  அரசியல் கட்சியை துவக்குவதாக முடிவு செய்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா விவாதத்திற்கு  எடுத்துக்கொள்ளப்பட்டு  நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் பிரசாத்  கூறினார். ஆனால்  அன்னா குழுவினரின் அரசியல் பிரவேசத்தால்  நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர மக்கள் அடங்கிய  பகுதிகளில் உள்ள தொகுதிகளில்  பா.ஜ.க.வின்  ஓட்டுக்கள் சரிவடையும் என்று அரசியல் பார்வையாளர்கள்  கூறுகின்றனர். என்றாலும் கூட  காங்கிரசுக்கு  எதிராக அன்னா குழுவினர்  பிரச்சாரம் செய்யும் போது  அதன்  தாக்கத்தால் ஏற்படும் எதிர்மறை ஓட்டுக்கள் தங்களுக்கு  சாதகமாக அமையும் என்று பா.ஜ.க.  தலைவர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எதிர்க்ட்சிகளை ஒன்று சேர்த்து  ஏற்கனவே  ஜெ.பி. மற்றும் வி. பி. சிங் ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர். எனவே  அன்னா ஹசாரேவை வைத்து  இப்போது  பா.ஜ.க.வும்  வருகிற 2014 பாராளுமன்ற  தேர்தலில் ஓட்டு அறுவடையை  செய்ய முடியும் என்றும் அதனால் காங்கிரஸ் கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்த முடியும் என்றும்  அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அன்னா குழுவினரின்  அரசியல் பிரவேசம் குறித்து  ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு  பேட்டி அளித்த  பா.ஜ.க.  தலைவர் நிதின் கட்காரி  அன்னா குழுவினரின் அரசியல் பிரவேசம் , பா.ஜ.க.விற்கு மாற்றாக இருக்க முடியாது என்றார். பா.ஜ.க.வின் உதவியை அன்னா குழுவினர் நாடினால் அவர்களுக்கு தேவையானதை  பா.ஜ.க.  செய்யும் என்றும் நிதின் கட்காரி  கூறினார்.  நாட்டில் 55 ஆண்டுகள் ஆட்சி செய்த  காங்கிரஸ் கட்சியால்தான் ஊழல் மலிந்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிராக பா.ஜ.க.தான்  போராட்ட்ங்களை நடத்தி வந்தது. அந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தை  தற்போது அன்னா குழுவினர் கையில் எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும் கட்காரி தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago