முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் குதிக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

சூரத், ஆக.- 5 - அரசியலில் குதிக்கப் போவதாக அன்னா ஹசாரேஅறிவித்ததை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவப்படம், பேனர்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வலுவான லோக்பால் மசோதா அமைய வேண்டும் என்று வலியுறுத்தி அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர், கடந்த ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். அப்போது மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து, அன்னா ஹசாரே  மற்றும் அவரது ஆதரவு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர்கள் இப்போது நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு குறைவதால், அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் அன்னா ஹசாரே அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இதை அன்னா ஹசாரே ஆதரவாளர்களின் ஒரு தரப்பினர் ஏற்க மறுத்தனர். அரசியலில் குதிக்கப் போவதாக அறிவப்பு வெளியிடப்பட்ட அதே உண்ணாவிரத பந்தலிலேயே ஹசாரேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதே எதிர்ப்பு, நாடு முழுவதும் அன்னா ஹசாரே குழுவினரிடத்தில் எழுந்தது. இதன் உச்சக்கட்டமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரேயின் உருவப் படத்தையும், ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் பேனர்களையும் எரித்து அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னா ஹசாரே குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு மற்றொரு சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷூம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்