முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்துக்கு ரூ. 480 கோடி நிவாரண உதவி: மத்தியஅரசு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

காந்திநகர், ஆக. - 5 - வறட்சியால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ. 480 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.  குஜராத் மாநிலம் தற்போது கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. பருவமழை காலத்தில் பெய்யும் மழையின் அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே இந்த ஆண்டில் இதுவரை மழை பெய்துள்ளது. சவுராஷ்டிரம் மற்றும் கட்ச் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநிலத்தில் மழை பொய்த்தது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுன் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. இக்குழுவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றனர். இக்கூட்டத்துக்கு பின் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தின் கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ. 480 கோடியை ஒதுக்க அமைச்சர்கள் குழுவுக்கு பிரதமர் அதிகாரம் அளித்துள்ளார். மேலும் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு நபருக்கு 100 நாள்கள் வரை வேலைவாய்ப்பு வழங்கலாம் என்ற உச்சவரம்பு குஜராத்துக்கு 50 நாட்களாக தளர்த்தப்படும். மாநிலத்துக்கு ரூ. 14,683 கோடி நிவாரண தொகை வழங்கும்படி குஜராத் அரசு கேட்டுக் கொண்டது. எனினும் அந்த கோரிக்கை மனுவை இரண்டாக பிரித்து முதல் பகுதியில் அவசர உதவியையும், இரண்டாவது பகுதியில் நீண்ட கால திட்டங்களையும் கோருமாறு முதல்வர் மோடியிடம் அமைச்சர் சரத்பவார் கூறினார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இது குறித்து சரத்பவார் கூறுகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள யதார்த்த நிலையை பரிசீலித்து அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு எங்களிடம் பிரதமர் கூறியுள்ளார். நீண்ட கால கோரிக்கைகளை பொறுத்தவரை திட்டக் குழுவையோ, நிதியமைச்சரையோ குஜராத் அரசு அணுகலாம் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்