முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சியால் பாதித்த மாநிலங்களில் கால்நடை தீவனங்கள் பற்றாக்குறை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. ஆக. - 6 - கர்நாடகம் உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கால்நடை  தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள்  பட்டினியால் வாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை காலதாமதமானதாலும்,  பல இடங்களில் போதுமான அளவுக்கு  பெய்யாததாலும்  கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 7  மாநிலங்களில் கடுமையான வறட்சி  ஏற்பட்டுள்ளது.  இந்த மாநிலங்களில்  தண்ணீர்  பஞ்சம் ஏற்பட்டுள்லதோடு  கால்நடை  தீவினங்கள்  சப்ளை மிக மோசமாக உள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட  இந்த மாநிலங்களில் வறட்சி நிவாரண பணிகளுக்காக மத்திய  அரசு ஏற்கனவே  ரூ. 2000 கோடி நிவாரண  உதவிகளை அளிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இம்மாநிலங்களில் கால்நடை  தீவனங்களுக்கு  கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாக பால் பண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை   ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு  காணுமாறு மத்திய  அரசுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில்  விவசாயிகள் பெற்ற கடன்களை  அம்மாநில அரசுகள் தள்ளுபடி செய்துள்ளன. இந்த விவாசாயக்கடனில் 75 சதவீதத்தை  மத்திய  அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்,  மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர்  மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார்  தலைமையிலான மத்திய  அமைச்சரவை குழு பார்வையிட்டது. அப்போது இந்த மாநில அரசுகள்  அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தன. ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும்  கால்நடை  தீவனங்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இந்த  மாநில அரசுகளும் மத்திய  அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இந்த மாநிலங்களில் மத்திய வேளாண்  துறை அமைச்சர் சரத் பவார்,  ஊரக அபிவிருத்தி  துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர்  விரைவில் வறட்சாயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட இருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்