முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இருந்து விலகினார் கேசுபாய் படேல்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

காந்திநகர், ஆக. - 6 - குஜராத் மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கேசுபாய் பட்டேல் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஷிராம், ராணாவும் ஜேசுபாயுடன் இணைந்து விலகி உள்ளனர். மேலும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார் கேசுபாய். குஜராத் மாநிலத்தை கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. 1990 ம் ஆண்டுகளில் குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேசுபாய் படேல். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பான படேல் இனத்தில் இருந்து சக்திவாய்ந்த தலைவராக கேசுபாய் உருவெடுத்தார். முன்னாள் முதல்வரான கேசுபாய் படேலுக்கும், தற்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மோடிக்கு எதிரான அதிருப்தி குழுவுக்கு தலைமை வகித்த கேசுபாய், இறுதியாக பா.ஜ.கவில் இருந்தே விலகி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நானும், கன்ஷிராம் ராணாவும் பா.ஜ.கவுக்காக பல ஆண்டுகள் உழைத்துள்ளோம். பேணி வளர்த்த கட்சியில் இருந்து வருத்தத்துடன் விலகுகிறோம். ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் கட்காரிக்கு அனுப்பியுள்ளோம். கட்சியில் இருந்து மாறவில்லை. மாறாக உண்மையான பா.ஜ.கவை உருவாக்கப் போகிறோம் என்றார். மோடியை கடுமையாக சாடிய அவர், கட்சி தனிப்பட்ட ஒரு நபருக்கானதாக மாறி விட்டது. அதன் கொள்கைகளில் இருந்து வெகுதூரம் சென்று விட்டது. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் மகிழ்ச்சியாக இல்லை. ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்ப்பது உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்தும் மோடி விலகி சென்று விட்டார். எங்களால் வடிவமைக்கப்பட்ட உண்மையான பா.ஜ.க.வாக தற்போது இல்லை. நாங்கள் தொடங்கும் புதுக்கட்சி குறித்து அறிவிப்பேன் என்றார். 83 வயதான கேசுபாய் படேல் தொடங்கவுள்ள புதுக்கட்சியால் குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago