முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களுடன் கை குலுக்கி கொண்டாடிய சோனியாகாந்தி

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.- 4 - டெல்லியில் முக்கிய சந்திப்புகளில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று கிரிக்கெட் வெற்றியை கொண்டாடினார்கள். ஐ.டி.ஓ. சவுக்பகுதியில் ரசிகர்கள் இனிப்புகளை வினியோகித்து கிரிக்கெட் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒரு காரில் வந்து இறங்கினார்.ந ள்ளிரவில் திடீரென சோனியா வந்ததை அங்கு இருந்தவர்களல் நம்ப முடியவில்லை. சோனியாவுடன் 2 கார்களில் பாதுகாப்பு படையினரும் வந்திருதனர். ஆனால் அவர்கள் யாரும் பொதுமக்களை தடுக்கவில்லை. இதனால் உற்சாகம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் சோனியாவுக்கு கைகொடுத்து மகிழ்ச்சியை பகிந்துகொண்டனர். அவர்களிடம் சோனியா நாம் ஜெயித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் கூறி கை குலுக்கினார். சுமார் 30 நிமிடம் அந்த பகுயில் இருந்தவர்களுடன் சோனியா கை குலுக்கி இந்திய வெற்றி கொண்டாடினார். 

சோனியாவும் மக்களோடு மக்களாக இருந்து கிரிக்கெட் வெற்றியைக்கொண்டாடும் தகவல் பரவியதால் நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்துவிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்களிடம் வணக்கம் தெரிவித்துவிட்டு சோனியா வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago