முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நடக்கிறது துணை ஜனாதிபதி தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.7 - நாட்டின்  அடுத்த துணை ஜனாதிபதியை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் லோக்சபை எம்.பி.க்கள் 543 பேரும் ராஜ்ய சபை எம்.பி.க்கள் 245 பேரும் ஓட்டு போட உள்ளனர். நாட்டின் 13 வது ஜனாதிபதியை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 19 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டார். இப்போது நாட்டின் 13 வது  துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்க இருக்கிறது. 

இந்த  தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி முகம்மது ஹமீது அன்சாரி,  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். 

இவருக்கு  ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள்  ஆதரவு அளித்துள்ளன. 

மேலும்  சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்,  இடது சாரி, ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியும்  அன்சாரிக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இநத தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க.மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் போட்டியிடுகிறார்.

இவருக்கு  பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில்  பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு  அளித்த ஐக்கிய ஜனதா தளம், சிவ சேனா கட்சிகளும் கூட இப்போது ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு அளித்துள்ளன.

 மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா  தலைமையிலான அ.தி.மு.க.வும் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு அளித்துள்ளது.

 ஆனால்  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் இந்த தேர்தலில் ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்துள்ளது.

அன்சாரிக்கு ஆதரவு தெரிவிக்கும்  ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும்  இதர கூட்டணியை சாராத ஆனால் அதரவு அளிக்கும்  கட்சிகளின் எம்.பி.க்களுக்கு  காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி நேற்று பகல் விருந்தளித்தார். இந்த விருந்தில் மம்தான பானர்ஜியின் திரிணமுல்  காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் லோக் சபையை சேர்ந்த 543 எம்.பி.க்களும், ராஜ்ய சபையை  சேர்ந்த 245 எம்.பி.க்களும்  ஓட்டு அளிக்க உள்ளனர்.

ஆக மொத்தம் 788 எம்.பி.க்கள் ஓட்டு போட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்