முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி விருந்து: முலாயம்சிங் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.8 - சோனியா காந்தி அளித்த விருந்தில், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் பிரபுல்பட்டேல் ஆகியோர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.  துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு தனது இல்லத்தில் மதிய விருந்து அளித்தார். தடபுடலாக  விருந்து நடந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீதுஅன்சாரி வெற்றி உறுதி செய்யப்பட்டதாக இருந்தது. இந்த விருந்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கலந்து கொண்டனர். சோனியாகாந்தி இருந்த இருக்கை அருகே மாயாவதி உணவருந்தினார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அருகில் முலாயமசிங் அமர்ந்திருந்தார். முலாயம்சிங் மகனும், உத்தரபிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவும் விருந்திற்கு வந்திருந்தார்.

           கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி வரவில்லையென்றாலும், தனது கட்சி எம்.பி.க்களை அனுப்பி வைத்தார். அவர்களுக்காக தனியாக மீன் வகைகள் பரிமாறப்பட்டன. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் பிரபுல்பட்டேல் ஆகியோர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் பவாரின் மகள் சுப்ரியா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தாரிக் அன்வர், டிபி திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

       காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித் சிங், மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி, வீரப்பமொய்லி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் ஆகியோருடன் விருந்து உண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்