முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா - கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

கோழிக்கோடு, ஆக.19  - கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள குடகு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனையொட்டி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியானார்கள்.  தெனமேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளாவிலும் போதுமான அளவுக்கு மழை இல்லை. நேற்றுமுன்தினத்தில் இருந்து கேரளாவில் குறிப்பாக மாநிலத்தின் வடக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள புல்லூரம்பாராபாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பேர் சிக்கி பலியானார்கள். வெள்ளப்பெருக்கிற்கு பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. ஒருவர் பலத்த காயத்துடன் உயிர்தப்பினார். 75 வயதாகும் அவர், சிகிச்சைக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியானவர்களில் 3 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த பலத்த மழை மேலும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழைபோல் கர்நாடக மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஹபினி, கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்