முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சிபாரிசு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,ஆக.8 - அசாம் மாநிலத்தில் நடைபெற்று வரும் வகுப்பு கலவரத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை மாநில முதல்வர் தரூண் கோகாய் கேட்டுக்கொண்டுள்ளார். அசாம் மாநிலத்தில் கோக்ரஜ்ஹர் உள்பட 3 மாவட்டங்களில் ஏற்பட்ட கோஷ்டி மோதலானது இனக்கலவரமாக மாறியது. அங்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி கலவரம் அடக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இந்தநிலையில் அசாம் மாநில காங்கிரஸ் முதல்வர் தரூண் கோகாய் நேற்று கவுகாத்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கோக்ரஜ்ஹர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நடந்த இனக்கலவரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டுள்ளன. அந்த சக்திகள்தான் கலவரத்தை தூண்டி விடுகின்றன. மேலும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் கலவரத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். அகதிகள் முகாம்களில் வெளிநாட்டுக்காரர்கள் தங்கியிருப்பதாக தெரிகிறது. அவர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். அவைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கலவரத்தை தூண்டிவிடும் தீய சக்திகள் யார் என்பதை அறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளேன். இனி மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்திற்கு இதுவரை 71 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களில் 7 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகிவிட்டனர். கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago