முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே குழுவினர் கட்சி துவக்கம்: பால்தாக்கரே தாக்கு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

மும்பை,ஆக.8 - அன்னா ஹசரே குழுவின் அரசியல் பிரவேசத்திற்கு பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து பால்தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னா வில் எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,  அரசியல் பற்றி அறிவாளிகள் குறிப்பிடும் போக்கிரிகளின் போக்கிடம் என்கின்றனர். இதில் ஹசாரேயும் கலந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதுதான் தெரிய வில்லை. சமீபத்தில் ஹசாரே உண்ணாவிரதமிருந்தபோது நான் மருத்துவமனையில் இருந்தேன். ஜந்தர்மந்தர் மைதானத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உண்ணிப்பாக கவனித்தேன். அங்கே கூடியிருந்தவர்கள் ஹசாரே நல்ல செய்தி அறிவிப்பார் என்று காத்திருந்தனர். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மட்டுமே இருந்து சாதிப்பது என்பது இயலாத காரியம் என்று அக் குழு உணர்ந்திருந்தது. எனவே அக்குழு தேர்தல் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம். 

நமது நாட்டில் மக்கள் சக்தியோடு யார் வேணடுமானாலும் கட்சி தொடங்க ஜனநாயகம் வழிவகுக்கிறது. யோகா குரு ராம்தேவும், ஹசாரேயின் குழுவில் இருந்து செயல்படுவாரா அல்லது தனியாக வெளியில் இருந்து செயல்படுவாரா என்பது தெரியவில்லை. போபர்ஸ் ஊழல் நடந்தபோது ஹசாரே குழு ஏன் மெளனம் சாதித்தது என்று தெரியவில்லை. ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் முறைகளில் ஊழல் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. தேர்தலின் போது கறுப்பு பணம் புழங்குவதை தடுக்காதவரை ஊழலுக்கு ஒரு முடிவு என்பதே கிடையாது. நம் நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் அரசியலை வழி நடத்தி செல்கின்றன.  பெரிய அளவில் அங்கு பணம் முதலீடு செய்யப்படுகின்றது. பணம் இல்லாமல் யாரும் தேர்தலில் நின்று விடமுடியாது. மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியது போல் பணம் இல்லாமல் தேர்தலிலும், அதற்காக நாடு முழுவதும் எப்படி ஹசாரே குழு பிரச்சாரம் செய்யப்போகிறது என்பதை விளக்க வேண்டும். இதற்கு ஹசாரே பதிலளிக்க வேண்டும். என்றார் தாக்கரே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago