முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் ``யுகம்''

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆகஸ்ட்-8- காதலித்து திருமணம் செய்த ஜோடி ராகுல், தீப்தி. இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் தனிக்குடித்தனம் நடந்துகிறார்கள். ஊட்டி ஷோகேஸ் செட் பண்ண ஒரு குரூப் வருகிறது. வேலை முடிந்த பின்பு அந்த குரூப்பில் ஒருவரை அறைந்து விடுகிறார் தீப்தி. பிறகு  ஒரு போன் வருகிறது. அதில் ராகுலுக்கு இன்று மாலைக்குள் உன் மனைவியை கொன்றுவிடு, உனக்காக காத்திருக்கிறேன் என்று ஒரு பெண் பேசுகிறாள். இந்த போன் பேச்சை தீப்தி கேட்கிறாள். அதே போல் தீப்திக்கு ஒரு போன் வருகிறது. அதில் உன் கணவரை கொலை  செய்துவிட்டு வா, உனக்காக காத்திருக்கிறேன் என்று ஒரு ஆண் குரல் பேசுகிறது. இதை ராகுல் கேட்டு விடுகிறார். இதனால் சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்களின் வாழ்க்கையில் சந்தேக பேய் ஆட்டிப்படைக்கிறது. 

இந்நிலையில் கணவன், மனைவிக்குள் ஒருவரை ஒருவர் யார் கொலை செய்து கொண்டார்களா? அந்த மர்ம போன் பேச்சு யாரிடமிருந்து வருகிறது என்பது திகில் பரப்பும் க்ளைமாக்ஸ்.

திகில் கதைக்கு பொருத்தமான தேர்வு நாயகன், நாயகி இருவரும் சந்தோஷமாக இருக்கும்போது வெளிப்படுத்தும் காட்சி. பிறகு சந்தேகப்படும்போது வெளிப்படுத்தும் காட்சிகளில்  ஒருவருக்கு ஒருவர் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். காமெடி பெயரில் பாண்டு அல்வா வாசு, முத்துகாளை என பலரின் நடிப்பு மனதில் ஒட்டவில்லை. ஒரு வீட்டுக்கள் ஒருசில கேரக்டர்களை வைத்துக் கொண்டு திகில் பரப்பும் திரைக்கதையை அமைத்து பமம் முழுக்க  பார்வையாளர்களை அமரவைத்திருக்கும் இயக்குனரின் திறமையை பாராட்டலாம்.

திகில் படத்துக்கான காட்சிகளுக்கு தேவையான ஒளிப்பதிவு திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை நேர்த்தியாக செய்திருக்கிறார் ஸ்ரீ பவன் சேகர், கதை சந்தோஷ்குமார். காட்சிகளுக்கு  உயிர் கொடுத்திருக்கிறது பொன்ராஜ் பின்னணி இசை. ஜி.பி.வெங்கடேஷ் எடிட்டிங் விறு விறுப்பை தருகிறது.  தயாரிப்பு ரவிக்குமார், பூங்கொடி, முகம் சுழிக்க வைக்கவில்லை யுகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்