முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகவான் ஸ்ரீ சாய் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: டாக்டர்கள் தகவல்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஆனந்தபூர்,ஏப்.- 4 - பகவான் ஸ்ரீ சாய் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் விரும்பும் சுவாமிகளில்  பகவான் சாய் பாபாவும் ஒருவர். இவருக்கு 85 வயதாகிறது. திடீரென்று சாய் பாபாவுக்கு நெஞ்சு இறுக்கமும் மூச்சுத்திணறுலும் ஏற்பட்டது. இதனையொட்டி இவர் கடந்த 28-ம் தேதி மிகவும் நவீனமயமான புட்டப்பர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் குழாயும் செயற்கை இருதயமும் பொருத்தப்பட்டுள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கிட்னி செயல்பாட்டை ஒழுங்குபடுத்த டயாலிசஸூம் செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்