முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.9 - புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை சட்டமன்றத்தில் முதல்வரும், அமைச்சர்களும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். ஆனால் இதை செயல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களை ஏமாற்றும் விதத்திலேயே இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். 

பேனர் வைக்க கூடாது என்று தடை சட்டம் உள்ளது. ஆனால் ஆளும் கட்சியினரே அந்த சட்டத்தை மீறி பேனர் வைக்கின்றனர். ஆனால் இதனை கலெக்டர் கண்டு கொள்ளவில்லை. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் அபாயம் உள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. 

காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட கடிதம் எழுதுவதாக சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி கூறினார். ஆணால் இதுவரை கடிதம் எழுதப்படவில்லை. வாட் வரி குறைக்கப்படவில்லை. காரைக்கால் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. நிலவரி, சொத்து வரி ஆகியவை ரத்து செய்யப்படவில்லை. 

மின் திருட்டு செய்த ஏனாம் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு வரும்போதெல்லாம் ஆளும் என்.ஆர்.காங்கிரசை விமர்சித்து பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சியினருடன் தொடர்பில் உள்ளனர். அரசின் சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள். இதை தட்டிக் கேட்க வேண்டிய நாராயணசாமி கேட்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்