முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேமுதிக ஒன்றிய செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

வேதாரண்யம் ஆக 9  - வேதாரண்யம் அருகே காதலர்கள் இருவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தேமுதிக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி சிறையிலடைக்கபட்டுள்ளார். வேதாரண்யம் அருகே வாய்மேட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட இருவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான தேமுதிக ஒன்றிய செயலாளர் செல்லத்துரையை வாய்மேடு போலீசார் கைது செய்து வேதாரண்யம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சேனாதிகாட்டைச் சேர்ந்தவர் நடராஜன் இவருடைய மகள் கரிஷ்மா (19) ஆதனுனூரைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சுதாகர் (27) இருவரும் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு கரிஷ்மாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் 

இதற்கிடையில் கடந்த 28 -ம் தேதி பி.ஏ படித்துள்ள கரிஷ்மா பிஎட் படிப்பதற்கு விண்ணப்பம் வாங்க போவதாகக் கூறிவிட்டு  காதலன் சுதாகருடன் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டனர்

கடந்த 4-ம் தேதி கரிஷ்மாவின் அண்ணன் கந்தவேலுவும் அதே ஊரைச் சேர்ந்த சசிகுமாரும் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி ஊருக்கு அழைத்து வந்து தாணிக்கோட்டகம் அருகில் கரிஷ்மாவையும் அவருடைய காதல் கணவன் சுதாகரையும் இரும்பு பைப்பால் தலையில் அடித்து கொலை செய்தனர். 

இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கந்தவேல், சசிகுமார் ஆகியோரை வாய்மேடு போலீசார் கைது செய்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வேதாரண்யம் ஒன்றிய தேமுதிக செயலாளர் செல்லத்துரை தலைமறைவாகி விட்டார் தலைமறைவான செல்லத்துரையை கைது செய்யக்கோர்யீ ஆதனுனூர் கடைத்தெருவில் கடந்த ஜுலை மாதம் 7-ம் தேதி பொது மக்களும் உறவினர்களும் சாலை மறியலில் டுபட்டனர் 

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தேமுதிக ஒன்றியச் செயலாளர் செல்லத்துரையை வாய்மேடு போலீசார் செய்து வேதாரண்யம் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்  இந்த நிலையில் நாகை மாவட்ட எஸ்.பி இராமர் பரிந்துரையின் பேரில் திருச்சி மத்திய சிறையிலடைக்கப்பட்ட செல்லத்துரையை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட கலெக்டர்  முனுசாமி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago