முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.10 - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து பயிலப் பயில அறிவு பெருகிக் கொண்டேயிருக்கும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழக மாணவ, மாணவியரின் அறிவாற்றல் பெருகும் வகையில் அவர்களின் கல்வியறிவை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இடை நிற்றலை முற்றிலுமாக நீக்கும் பொருட்டு, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையைப் போல,  மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம்  பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில்  22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.  இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன்   செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக  தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் சப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக  ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.

தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின்  விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்தச் சலுகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு  தன்னம்பிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரத்தின் நிலையில் உயர்வினையும் அளிக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago