முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சுயலாபமே டெசோ மாநாட்டின் நோக்கம்: சீமான்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.11 - தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வராத டெசோ மாநாட்டை தமிழினத்தவர் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் கேட்டுக் கெண்டுள்ளார். இது தெடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் ர்வீகக் குடிகளான தமிழர்கள் முழு அரசியல் உரிமையுடனும், இறைமையுடனும், பாதுகாப்புடன் வாழ ஒரே வழி தனித் தமிழீழமே என்கிற இலக்கை எட்ட தங்கள் இன்னுயிரை தந்த போராளிகளின் ஈகையை அவமதிக்கும் செயலே டெசோ என்ற பெயரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடாகும்.

போர் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், போரினால் இடம் பெயர்ந்து சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாகவுள்ள மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் இதுவரை குடியமர்த்தப்படவில்லை.

மாறாக, தமிழர் வாழ்ந்த மியில் 30 விழுக்காட்டிற்கு மேல் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கில் சிங்களவர்கள் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழர்களின் விளை நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இப்படி தமிழீழமே சிங்கள காலனியாக மாற்றப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி, போர் முடிந்த பின்னரும் தமிழர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை பல்வேறு வகைகளில் இனவெறி ராஜபக்ச அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் ஆதாரங்களுடன் வெளியிட்டன. இலங்கை அரசே அமைத்த கற்ற பாடங்களும் இணக்கப்பாடும் என்கிற ஆணையம் கூட, மறுகுடியமர்த்தலும், மறுசீரமைப்புப் பணிகளும் நடைபெறவில்லை என்று குறை கூறியிருந்தது.

இதைப்பற்றியெல்லாம் இந்த 3 ஆண்டுக்காலத்தில் வாய் திறக்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சந்தித்துப் பேசிய பிறகு, ஈழ விடுதலை தொடர்பான தீர்மானம் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்படாது என்று அறிவித்தார். இப்போது, இந்த மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளார்.

இன்றைக்கு நீங்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு என்று நடத்துகிறீர்களே, அப்படியானால், ஈழத் தமிழர்களின் வாழ்விற்கு அந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதுதானே பொருள்? அதற்குக் காரணம் இலங்கை அரசும், அதன் இனவெறி ராணுவமும்தானே? உண்மை இவ்வளவு தெளிவாக இருக்க, டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இலங்கை அரசுக்கு எதிரானது இல்லையென்றால் அதற்கு ஆதரவான மாநாட்டைத்தான் டெசோவின் பெயரால் தி.மு.க. நடத்துகிறதா?

தமிழினத்தை திட்டுமிட்டு அழித்தொழித்த ராஜபக்சவுக்கு என்றைக்காவது தி.மு.க. நெருக்கடி கொடுத்துள்ளதா? அப்படி நெருக்கடி கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கூட்டமோ மாநாடோ நடத்தியுள்ளதா தி.மு.க.? தமிழின எதிரி ராஜபக்சவுக்கு இணக்கமான அரசியலை நடத்திவிட்டு, இப்போது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு என்று நடத்துவதன் நோக்கம் சுயலாப அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன? தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் இம்மாநாடு கொண்டு வராது என்பதையும் தமிழினத்தவர் அனைவரும் புரிந்துகொண்டு, டெசோ மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி கேட்டுக் கெண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்